சிறப்புச் செய்தி

50 ஓவர் உலக கோப்பை: டிக்கெட்டுக்காக 1.5 கோடி விண்ணப்பங்கள்

10 hours ago 17 பார்வைகள்
50 ஓவர் உலக கோப்பை: டிக்கெட்டுக்காக 1.5 கோடி விண்ணப்பங்கள்

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

கடந்த 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யாவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின் தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தென்ஆப்பிரிக்காவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில் உள்ள போட்டிகளை காண டிக்கெட் பெற விரும்பும் ரசிகர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கடந்த 12 நாட்களுக்கு முன்னதாக ஐசிசி அறிவித்திருந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.

மொத்தம் 44 லட்சத்து, 23 ஆயிரத்து 417 டிக்கெட்டுகள் குலுக்கல் மூலம் வழங்கப்படும். அடுத்த மாதம் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில் இன்று வரை 15.08 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்