தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பில் உதயநிதி..!

துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கையாண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் பேசினார். அப்போது, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது என அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மட்டுமல்ல அவர் துணை முதலமைச்சருக்கு நிகரானவர் என்பதை தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக் கோட்டை திருச்சி தான் எனக் கூறினார். ஆங்கில புத்தாண்டு பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தங்களை பொறுத்தவரை முதல்வரின் வருகையால் இன்று முதலே புத்தாண்டு தான் என அவர் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel