தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சர்வதேச மகளிர் தினம் - மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதா்சன் பட்நாயக்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர்.

எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel