தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்துகிறார்.. கணவன் மீது மனைவி புகார்

டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது கணவர், அந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதோடு, ஆபாச பட நடிகைகள் அணியும் உடையை அணிந்து, தன் முன் நிற்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக கணவர் இவ்வாறு வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஆபாச உடை அணிய வற்புறுத்துவதுடன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை முதல் கட்டத்திலேயே இருக்கிறது என்று கூறிய துணை கமிஷனர் ரோகித் மீனா, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel