INDIAN 7

Tamil News & polling

வசமாக சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி.. ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு..!

20 ஜூன் 2024 11:01 AM | views : 811
Nature

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டி இதன் மூலம் வசமாக சிக்கி உள்ளார்.

அதாவது, சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வந்த வண்ணமே இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டவுசர் மூலம் போலீசார் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம். இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ரூபாய் 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாவை தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் பார்வையிட்டார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெலுங்குதேசம் கட்சி தற்போது தெரிவித்திருக்கிறது. விலை உயர்ந்த கண்ணாடிகள், கிரானைட் கல் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டுள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். மொத்தம் 500 கோடி வரை செலவு செய்து ஜெகன்மோகன் ரெட்டி இந்த பங்களாவை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்