,கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான சிவராமன் என்.சி.சி பயிற்சிக்காக மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமன், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
இந்நிலையில் போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்.சி.சி. நபர்களால் போலி என்.சி.சி. முகாமில் கலந்துகொள்ளும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஊடகங்களில் இன்று செய்தியாக வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தச் செய்தி ஒரு தெளிவற்ற தவறான தகவல் மற்றும் என்.சி.சி. பணியாளர்களின் ஈடுபாடு என தவறாக சித்தரிக்கப்பட்டு உண்மைகளை மறைக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!