INDIAN 7

Tamil News & polling

திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் !

18 செப்டம்பர் 2024 06:03 AM | views : 929
Nature

திருப்பதி:

திருப்பதியில் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 22-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ஹர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதே நாள் மாலை 3 மணிக்கு மெய் நிகர் சேவை டிக்கெட் வெளியிடப்படுகின்றன. 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்க பிரதட்சன டோக்கன்கள் வெளியிடப்பட உள்ளன.

Like
2
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்