INDIAN 7

Tamil News & polling

மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி

04 அக்டோபர் 2024 02:18 AM | views : 1287
Nature

மனைவியை கணவன் பலவந்தத்தின்மீலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.

இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Like
7
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்