INDIAN 7

Tamil News & polling

லட்டு சர்ச்சை : பவன் கல்யாண் மீது போலீசில் புகார்

09 அக்டோபர் 2024 01:23 AM | views : 1339
Nature

அமராவதி,திருப்பதி கோவில் லட்டுவில் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததாகவும், இந்த லட்டுகளை அயோத்திக்கும் அனுப்பி வைத்து இருப்பதாகவும் ஆந்திர துணை முதல்-மந்திரியும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் குற்றம் சாட்டி உள்ளார். இதையடுத்து பவன் கல்யாண் மீது பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் ஐதராபாத்தில் உள்ள பஞ்சா குட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "பவன் கல்யாண் பேச்சு பைத்தியக்காரத்தனமாக உள்ளது. அயோத்தி ராமர் கோவிலுக்கு விலங்குகள் கொழுப்பு கலந்த ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அனுப்பியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தது. ஆனால் லட்டுவில் கலப்படம் செய்த விஷயத்தை சந்திரபாபு நாயுடு வெளியிட்டது ஜூலை மாதத்தில். அப்படி இருக்க ஜனவரியில் திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்தது இவருக்கு எப்படி தெரியும். எனவே சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் மனு அனுப்பி உள்ளேன்'' என்றார்.

Like
0
    Dislike
1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்