INDIAN 7

Tamil News & polling

ரஜினிகாந்த் வேட்டையன் ரசிகர்கள் திரை விமர்சனம்!

10 அக்டோபர் 2024 05:32 AM | views : 1205
Nature

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தின் விமர்சனத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


முதல் பாதி அருமை. இடைவேளை டுவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் பாதியும் சிறப்பு. ஞானவேல் தன் கதையை படமாக்கிய விதம் சூப்பர். தலைவர் கலக்கிட்டார்.


படம் கண்டிப்பாக பிளாஸ்பஸ்டர் தான். வசூலில் எத்தனை சாதனைகளை முறியடிக்கப் போகிறதோ?. இசையில் மேஜிக் செய்துவிட்டார் அனிருத். ஃபஹத் ஃபாசில் வழக்கம் போல் கைதட்டல்களை பெறுகிறார்.

பி.ஜி.எம். சும்மா அதிருது. மனசிலாயோ பாடல் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஞானவேலுக்கு நன்றி.


துஷாரா விஜயனின் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இது ரஜினி படம் என்றாலும் ஞானவேல் படம். தான் சொல்ல வந்ததை ரஜினியை வைத்து நேர்த்தியாக சொல்லிவிட்டார். பரபரப்பாக செல்கிறது படம்.


செம படம். இரண்டாம் பாதி பிரச்சனை வேட்டையனுக்கு இல்லை. ரஜினியின் நடிப்பும், ஸ்டைலும் கவர்கிறது. நல்ல மெசேஜ் கொடுத்திருக்கிறார் ஞானவேல். கல்வி மாஃபியா பற்றி ஞானவேல் தெரிவித்த விஷயம் அருமை. வேற லெவலாக இருந்தது படம்.


படம் ஆரம்பித்து முதல் அரை மணிநேரம் புல்லரிக்க வைத்துவிடுகிறார் ஞானவேல். ரஜினிக்காக ஞானவேல் வைத்திருக்கும் அறிமுக காட்சி தீயாக உள்ளது. மாஸான படம். வேட்டையனின் வசூல் வேட்டையை யாராலும் தடுக்க முடியாது. வேட்டையன் படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே வேட்டையன் படம் ரிலீஸாகும் முன்பே #VettaiyanDisaster என்கிற ஹேஷ்டேகை எக்ஸ் தளத்தில் டிரெண்டாக வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். இதை எல்லாம் விஜய் தட்டிக் கேட்க மாட்டாரா என பிற நடிகர்களின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Like
4
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்