யூடியூபில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டு வந்த, திவ்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி... டிக்டாக் வீடியோவை வெளியிட்டு, பிரபலமானவர்.. இந்த பிரபலமடைவதற்கு காரணமே, அவரது சர்ச்சை பேச்சுக்கள்தான்.. இதேபோல ஆபாசமாக பேசி பிரபலமானவர் திவ்யா.. இவர் தஞ்சையை சேர்ந்தவர்..!
திடீரென டிக்டாக் ஆப்புக்கு தடை விதிக்கப்பட்டுவிடவும், திவ்யா யூடியூப் பக்கம் தாவினார்.. நிறைய வீடியோக்களை பதிவேற்றினார்.. ஆனால், அந்த வீடியோக்களில் பெரும்பாலும் ஆபாசமாக இருந்ததாக கருத்துக்கள் பதிவாகி வந்தன.. திவ்யா மீது விமர்சனங்களும் கிளம்பின.
இதையேதான் சுகந்தியும் யூடியூப்பில் பின்பற்றி ய்து வந்தார்.. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களாகவே மோதல் இருந்து வந்தது.. வீடியோக்களை வெளியிட்டு, அதில் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.. பொதுவெளியிலேயே இவர்களின் சண்டை நடக்கவும், இது தொடர்பாக போலீஸ் வரை விஷயம் சென்றது.
கடந்த 2020 டிசம்பர் மாதம் சுகந்தி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.. அதில், திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் ஆபாசமாக பேசியது உண்மைதான் என்பதை உறுதி செய்தனர்.
தனிப்படை பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து திவ்யாவை போலீசார் தேடி வந்தனர்... எனவே, எந்த நேரமும் திவ்யா கைதாகலாம் என்று கூறப்பட்டது.. ஆனால், விஷயம் கேள்விப்பட்ட திவ்யா, போலீசார் தன்னை தேடி கொண்டிருக்கிறார்கள் என்ற வீடியோ வெளியிட்டார்.. தனது குடும்பத்தை பிடித்து வைத்துகொண்டு தனக்கு ஜாமீன் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், அதற்கு தனது கூகுள் பே மூலம் பணம் அனுப்ப கோரியும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுவிட்டு, மறுபடியும் தலைமறைவாகி விட்டார்...
அந்த வீடியோ பதிவிட்டதால், அவரது செல்போன் நம்பரை வைத்து போலீசார் டிராக் செய்தனர்.. இதையும் தெரிந்து கொண்ட திவ்யா, தஞ்சை, சென்னை, வடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மாறி மாறி இடம்பெயர்ந்து கொண்டே இருந்துள்ளார்... இறுதியில் நாகபட்டினத்தில் திவ்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. நாகூரில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது..
இதையடுத்து தேனி சைபர் க்ரைம் அலுவலகமும் அழைத்து வந்து விசாரித்தனர். இப்போது திவ்யா நிலக்கோட்டை ஜெயிலில் உள்ளார். ஏற்கனவே யூடியூபில் ஆபாச பதிவு செய்த பப்ஜி மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்ததையடுத்து தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும்
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!