சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பா.ஜ.க தவறான முறையில் பயன்படுத்துகிறது.
இந்த தேசம் அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? பா.ஜ.க அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா.ஜ.க. அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இசைவாணி 5 ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
கனமழையால் தவிக்கும் மக்கள்; TVK தலைவர் விஜய் எங்கே போனார்? குமுறும் பிரபலம்!
அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
வெறும் ரூ.200க்கு BSNLன் அட்டகாசமான திட்டங்கள்!
பும்ரா நம்பர் ஒன் பிளேயர் என்பதை தாண்டி நல்ல மனுஷன் - புஜாரா
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!