INDIAN 7

Tamil News & polling

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த SJ சூர்யா!

01 டிசம்பர் 2024 04:02 PM | views : 669
Nature

தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, தல அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலமாக மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று "நடிப்பு அரக்கன்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல. இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்குவதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் எஸ் ஜே சூர்யா.




இந்த சூழலில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "நியூ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஹீரோவாக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக பல மெகா ஹிட் திரைப்படங்களில் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான நடிகர் மகேஷ்பாபுவின் "ஸ்பைடர்" திரைப்படம் எஸ்.ஜே சூர்யாவிற்கு வில்லனாக மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக "மெர்சல்", "நெஞ்சம் மறப்பதில்லை" மற்றும் "மாநாடு" போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார்..




இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே சூர்யா வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த 2024ம் ஆண்டில் அவருடைய நடிப்பில் இரண்டு தமிழ் திரைப்படங்களும் ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மொத்தம் ஐந்து திரைப்படங்களில் இப்போது அவர் நடித்த வருகிறார். இந்த சூழலில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.




ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது தான் "கில்லர்" என்கின்ற திரைப்படம். இது எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம். ராம் சரணின் "கேம் சேஞ்சர்" படத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் அந்த படம் வெளியான ஒரு சில வாரங்கள் கழித்து, கில்லர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும், ஜனவரி முதல் அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்றும் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா கூறியிருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்