POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை

1 year ago 09 ஜனவரி 2025 03:31 PM | views : 198
பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தந்தை பெரியார் குறித்து பல்வேறு விமர்சனங்களைக் காட்டமாக வைத்தார். பெரியார் சொன்னதாகப் பேசியதற்கு ஆதாரம் கோரி பெரியார் ஆதரவாளர்கள் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று காலை சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றார்கள். காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். மேலும், புதுச்சேரி சென்றுள்ள சீமானைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் முற்பட்டனர். அங்கும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக சீமான் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக தான் ஆதாரங்களைத் தருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

"சென்னை புத்தகக் காட்சியில் நூல் வெளியீட்டு விழாவில் சீமான் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். இதன்பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பெரியார் எங்கே சொன்னார், எந்தப் புத்தகத்தில் சொன்னார் என்பதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக நான் ஆதாரம் கொடுக்கிறேன்.அதைப் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை என்பது என்னுடையக் கருத்து. காரணம், பெரியார் பேசிய நிறைய புத்தகங்களை அழித்துள்ளார்கள். அந்தளவுக்குப் பெரியார் பேசியிருக்கிறார்.

பெரியார் பேசியிருப்பதாக சீமான் சொன்னதை, எந்தப் புத்தகத்தில் பெரியார் எழுதியிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். காவல் துறையினர் யாரேனும் சீமான் வீட்டுக்கு வந்தால், அந்தப் புத்தகத்தையும் அதன் நகலையும் கொடுத்தால் போதும். ஆனால், பொதுவெளியில் அதைப் பேச நான் விரும்பவில்லை.


காரணம் பெண்கள் பார்க்கிறார்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை எல்லாம் நாம் பேச ஆரம்பித்தால், மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதைப் போன்று சில வார்த்தைகள் அதில் உள்ளது. ஆனால், சீமான் சொன்னது சரி தான் என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு கருத்தை வைத்துள்ளார்கள். சீமான் ஏன் சொன்னார் என்பதை அவர்தான் கூற வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், அவர் பேசியிருக்கிறார் அதற்கான காரணத்தைத் தர நான் தயார்.

காலம் கடந்துவிட்டது, அரசியல் மாறிவிட்டது. மக்கள் புதிய பார்வையில் அரசியலைப் பார்க்கிறார்கள். பெரியார் இதற்கு முன்பு பேசியதை எல்லாம் எடுத்து பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்" என்றார் அண்ணாமலை. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் அதிமுக VIJAY சென்னை பாஜக CHENNAI அண்ணாமலை BJP ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK PMK TTV DHINAKARAN பாமக காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் உதயநிதி ஸ்டாலின் கனமழை திருமாவளவன் இந்திய அணி கோவை CONGRESS தமிழகம் சீமான் COIMBATORE கைது ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி PARLIAMENT ELECTION வன்னியர் OPS INDIAN CRICKET TEAM தேவர் கொலை KEERTHY SURESH அமமுக THIRUMAVALAVAN UDHAYANIDHI STALIN மதுரை வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS தென்காசி சூர்யா நெல்லை AJITH SURIYA ஓபிஎஸ் NELLAI தமிழ்நாடு கொரோனா விடுமுறை ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS CSK BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை அன்புமணி மோடி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் அஜித் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி