97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை அனோரா வென்றது. இதே போல சிறந்த நடிகர் யார்? நடிகை யார், இயக்குனர் யார்? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன என விரிவாக பார்க்கலாம்.
சினிமா துறையில் உலகளவில் ஆஸ்கர் விருதுகள் முதன்மையானதாக கருதப்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கொனன் ஓ பிரைன் (Conan O'Brien தொகுத்து வழங்குகிறார். இந்தியர்களுக்காக அவர் இந்தியில் வரவேற்று சில வார்த்தைகளை பேசியது கவனம் ஈர்த்தது.
ஆஸ்கர் விருதுகள் 2025
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமான எமிலியா பெரெஸ் 13 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பிரிவுகளில் தேர்வான ஆங்கிலம் மொழி அல்லாத திரைப்படம் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ் கான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து 'புரூட்ட லிஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இதுமட்டுமின்றி Wicked எனும் படம் 10 பிரிவுகளிலும், Conclave, A Complete Unknown ஆகிய படங்கள் 9 பிரிவுகளில் தேர்வாகியுள்ளன. இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த 'அனுஜா' என்ற குறும்படம் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.
விருதுகளை வென்றவர்கள் பட்டியல் :
1. சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை வென்றது FLOW திரைப்படம். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் லாத்வியா நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாக இந்த படம் 2024-ல் வெளிவந்தது. 2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் தயாரிப்பு பணிகள் ஐந்தரை ஆண்டுகள் நடைபெற்றது.
2. சிறந்த துணை நடிகருக்கான விருதை A Real Pain படத்தில் நடித்த கீரன் கல்கின் (Kieran Culkin) வென்றார்.
3. சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை Wicked படத்திற்காக Paul Tazewell வென்றார்.
4. ‘அனோரா’ (Anora) படத்தின் அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை சீன் பேக்கர் (Sean Baker) வென்றார். இவர் தனது ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளர்களுகாக அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
5. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை Conclave படத்திற்காக பீட்டர் ஸ்ட்ராஹன் பெற்றார்
6. எமிலியா பெரெஸ் படத்தில் ரீட்டாவாக நடித்த ஜோ சல்டானா (Zoe Saldaña) சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
7. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் 'The Substance' படத்திற்கு கிடைத்தது.
8. அனோரா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பு விருது சீன் பேக்கருக்கு கிடைத்தது.
9. சிறந்த அனிமேஷன் குறும்படம் பிரிவில் In the Shadow of the Cypress படத்திற்கு விருத் கிடைத்தது.
10. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் Wicked படத்திற்கு விருது கிடைத்தது.
11. சிறந்த பாடல் பிரிவில், மிலியா பெரெஸ் படத்தின் எல் மால் பெற்றார்.
12. சிறந்த கலை இயக்கம் பிரிவில் Wicked படத்திற்காக Nathan Crowley மற்றும் Lee Sandales ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றனர்.
13. சிறந்த ஆவணப்படம் (குறும்படம்) பிரிவில் The Only Girl in the Orchestra படம் ஆஸ்கர் விருதை வென்றது.
14. சிறந்த ஆவணப்படம் (திரைப்படம்) பிரிவில் No Other Land படம் ஆஸ்கர் விருதை வென்றது.
15. சிறந்த ஒலி வடிவமைப்பு - Dune: Part Two
16. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - Dune: Part Two
17. சிறந்த லைவ் ஆக்ஷன் (குறும்படம்) - I’m Not a Robot
18. சிறந்த ஒளிப்பதிவு - The Brutalist
19. சிறந்த சர்வதேச திரைப்படம் - I’m Still Here, பிரேசில்
20. சிறந்த இசை - The Brutalist படத்துக்காக Daniel Blumberg
சிறந்த நடிகர், நடிகை
21. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை The Brutalist படத்தில் நடித்ததற்காக Adrien Brody பெற்றார்.
22. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்தின் இயக்குனரான சீன் பேக்கர் வென்றார்.
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!