INDIAN 7

Tamil News & polling

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

02 ஜூன் 2025 12:15 PM | views : 1489
Nature

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது மகாராஷ்டிரா கோசேவா ஆயோகின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்