INDIAN 7

Tamil News & polling

ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

22 அக்டோபர் 2025 03:03 AM | views : 352
Nature

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சக்திவேல் (32 வயது). இவர் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தாத்தா வீட்டில் வசித்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன் சக்திவேலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர்.

அந்த இளம்பெண்ணுடன் சக்திவேல் தனிமையில் நெருக்கமாக இருந்ததை செல்போனில் ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் சக்திவேல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த பெண்ணிடம் ரூ.3 லட்சம் பறித்துள்ளார். பின்னர் மேலும் ரூ.1 லட்சம் தருமாறு அந்த பெண்ணை மிரட்டினார். ஆனால் அவர் சக்திவேலுக்கு கூடுதலாக பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்கள் சிலரின் செல்போனுக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அவர்களும் இளம்பெண்ணை மிரட்டினர்.

இதுகுறித்து இளம்பெண் தனது தாயாரிடம் கூறினார். இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் நேற்று காலையில் தனது தாத்தா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இளம்பெண் தனது சாவுக்கு காரணமானவர்கள் என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பேரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேல், மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜா (36 வயது), முருகேசன் (42 வயது) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத, விரும்பாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் அஜித்குமார், கவின், ரிதன்யா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்