INDIAN 7

Tamil News & polling

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு

19 நவம்பர் 2025 04:32 PM | views : 175
Nature

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிகருப்பு (24 வயது). இவர் ஒரு வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி, வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் ஜன்னல் வழியாக அந்த சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு கதவு மீது கல் எறிந்து சங்கிலிகருப்பு சத்தம் போட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி வீட்டிற்குள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் கழுத்தில் தூக்குப்போட்டதற்கான காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சிறுமியின் தந்தை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்குப்பதிவு செய்து சங்கிலிகருப்புவை தேடி வருகிறார்கள்.

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது

Image திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக

Image மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை.

Image மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்