INDIAN 7

Tamil News & polling

நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இயக்குநர்!!

25 அக்டோபர் 2021 02:31 AM | views : 884
Nature

இயக்குநர் ஒருவர் ஷூட்டிங் என சொல்லி அழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக மாடலிங் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மாடலிங் துறையில் இருந்த பெண்ணை வைஷ்ணவி பிலிம் புரொடக்‌ஷனில் இருந்து தியா வர்மா என்பவர் தொடர்பு கொண்டார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதை அடுத்து அந்த பெண்ணும் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அந்த பெண் இயக்குநர் அழைத்த பங்களாவிற்கு சென்றார். அப்போது தியா அங்குள்ளவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அங்கு உள்ளவர்கள் அனைவரும் திரையுலகை சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையடுத்து அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் கொஞ்சம் அரை மயக்கத்தில் இருந்தபோது ஒரு ஆடையைக் கொடுத்து இதை அணிந்து வாருங்கள் படம் பிடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



அந்த ஆடையை வாங்கிக்கொண்டு அந்த பெண் அறைக்குச் சென்று உடை மாற்றும் போது அங்கே ரகசியமாக பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் நிர்வாணமாக நின்ற பெண்ணை படம் பிடித்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் அந்தப்பெண்ணிடம் அந்த வீடியோவை காட்டியதும் அவர் அதிர்ந்து போனார். தாங்கள் ஆபாச படம் எடுக்க உள்ளதாகவும், அதில் நடிக்கவில்லை என்றால் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர்.



அந்த வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து மிரட்டி பணம் பறித்தல், தகவல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீஸார் பெண்ணை மிரட்டியவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.



Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்