கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் தமிழநாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.
இவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை உடனே சிபிசிஐடிக்கு மாற்றும்படியும், குற்றவாளிகளை கைது செய்யும்படியம் கூறி பல்வேறு போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. இந்த போராட்டங்கள் நேற்று கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மூவரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் அந்த ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள விசாரணை செய்யும் இடம் ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளியில் என்ன நடந்தது? மாணவி இறந்தது எப்படி? மாணவிக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
இது போக கலவரம் நடந்தது தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. தாளாளர், செயலாளர் தவிர தற்போது 2 ஆசிரியர்களும் கைதாகி உள்ளதால் இதற்கு பின் வேறு சில காரணங்கள், பின்னணிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. நேரில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.
அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் விதமாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேரடியாக 5 பேரை ரகசிய இடத்தில் சந்தித்து விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மாணவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திட்டமிட்டு இருக்கிறார்.
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!