POLLING FLAMES

 

அதிமுக பொதுக்குழு விவகாரம் ஓபிஎஸ் தரப்பிற்கு டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர்!

3 years ago 08 ஆகஸ்ட் 2022 09:47 AM | views : 239
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி பரிந்துரை அளித்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை வரும ஆகஸ்ட் 10-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK தவெக AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் AIADMK காங்கிரஸ் PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் CONGRESS முக ஸ்டாலின் ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN கோவை இந்திய அணி தமிழகம் திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI சீமான் தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சட்டசபை தேர்தல் அமமுக கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM OPS AJITH PARLIAMENT ELECTION TAMIL ACTRESS தேவர் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI நெல்லை வடகிழக்கு பருவமழை கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL CSK திருப்பரங்குன்றம் சூர்யா விடுமுறை கள்ளக்காதல் RAJINIKANTH மதுரை தூத்துக்குடி வன்னியர் அஜித் ELECTION COMMISSION SURIYA தீபாவளி தென்காசி கீர்த்தி சுரேஷ்