Tamil News & polling
மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது,.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் டாஸில் இருந்தது போன்று இந்திய அணிக்கு தொடக்கம் கிடைக்கவில்லை.
டி20 உலககோப்பை - ஜிம்பாப்வே வெளியேறியது.. பாக். வீழ்த்திய ஜிம்பாப்வே , நெதர்லாந்திடம் வீழ்ந்ததுடி20 உலககோப்பை - ஜிம்பாப்வே வெளியேறியது.. பாக். வீழ்த்திய ஜிம்பாப்வே , நெதர்லாந்திடம் வீழ்ந்தது
தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய போதும், அவரின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முசர்பாணி வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயன்ற ரோகித் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மறுமுணையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அதிரடியை காட்டினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்தார்.
மிடில் ஆர்டரில் மிகவும் பலமாக பார்க்கப்பட்ட விராட் கோலி நிதானமாக விளையாடினார். எனினும் அவரின் ரசிகர்களுக்கு இன்று ஏமாற்றமே 25 பந்துகளில் 26 ரன்களை அடித்து துரதிஷ்டவமாக விக்கெட்டை பறிகொடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் வெறும் 3 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றினார்.
இதனால் 13.3 ஓவர்களில் இந்திய அணி 101/4 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் ஜோடி வாணவேடிக்கை காட்டினர். கடைசி வரை நின்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். அவருக்கு நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்த மைதானத்தில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது மிகவும் கடினமாகும்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்