ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு!

நவம்பர் 10, 2022 | 10:53 am | views : 487
டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.
Also read... கையில் காப்புடன் மாஸ் லுக்கில் விஜய்... வைரலாகும் புகைப்படம்..!
அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது.
நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர்.
அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் "பலவந்தமாக" பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.
"புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை" என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் "தெளிவாக" இருந்ததாக காவல்துறை கூறுகிறது.
அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார்.
பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.
நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை.
ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், "அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது" பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது.
குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்
டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம்
கோபமாக வெளியேறிய ஆளுநர்.. முதல்வரின் ரியாக்ஷன்.. இணையத்தில் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகள்
2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிகாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில்
ஓபிஎஸ், இபிஎஸ்... இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா, இடைத்தேர்தலில் அதிமுகவே களம் காணும் என அறிவித்துவிட்டது. இதனை தொடரந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். பாஜகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சியாக, அக்கட்சி போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம்..! விக்ரமன் 2ம் இடம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர். தங்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் தமிழின் இறுதிப் போட்டி வரை சென்ற அவர்களில் இப்போது அசீம் வெற்றி
பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் - கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் பேச்சால் பரபரப்பு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அருகே மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், தொடர்ச்சியாக திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துத்துறை சேவையை போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில், 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு
மருமகனுடன் ஓடிய மாமியார்.. கலங்கி நிற்கும் அப்பா, மகள்!
ராஜஸ்தானில் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தர வேண்டும் என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
வெளியே வந்தவுடன் சுயரூபத்தை காண்பித்த பிக்பாஸ் விக்ரமன்!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்ற விக்ரமன் பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். அறம் வெல்லும் என்ற ஒற்றை சொல்லை வைத்து அனைவரின் மனதிலும் இடம்
'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட்
உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது பேப்பர் ராக்கெட் பார்ட்