INDIAN 7

Tamil News & polling

படுத்த படுக்கையில் இருக்கும் நடிகை சமந்தா - நடக்க முடியாமல் அவதி

26 நவம்பர் 2022 09:10 AM | views : 635
Nature

நடிகை சமந்தாவின் கால் எடுத்துக் கூட வைக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் படுத்த படுக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவின் உடல்நிலை
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,

அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாகி பரவியது.

இதுகுறித்து நடிகை சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.



சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடக்க முடியாமல் அவதி
இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.



அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்