யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக கொடுக்கப்பட்ட பழைய வழக்கில் தற்போது வளசரவாக்கம் போலீசாரால் நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவர் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
நாஞ்சில் விஜயனும் டிக்டாக் பிரபலமாக அறியப்படும் சூர்யா தேவியும் கடந்த 7 ஆண்டுகள் நண்பர்களாக பழகி உள்ளனர். இதற்கிடையே நடிகை வனிதா விஜய குமார் கடந்த 2020 ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூபர் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இணைய ஊடகங்களில் பேட்டியளித்தனர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.
அந்த வகையில் வனிதா விஜயகுமாரின் 3ஆவது திருமணம் குறித்து அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. வனிதா விஜயகுமாருக்கும், சூர்யா தேவிக்கும் யூடியூப் முலம் பரஸ்பரம் குற்றச்சாட்டு பதிவு செய்து வெளியிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் நாஞ்சில் விஜயன் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டதால், நாஞ்சில் விஜயன் வீட்டுக்கு சூர்யா தேவி சென்றபோது, அவரை விஜயன் தாக்கியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் நாஞ்சில் விஜயன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!