INDIAN 7

Tamil News & polling

மூன்றே நாட்களில் 3000 கோடிகளை தாண்டிய அவதார் 2 வசூல்!

19 டிசம்பர் 2022 07:48 AM | views : 666
Nature

Avatar 2 box office collection: அவதார் 2 திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி வசூலித்து சினிமா ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர், பலர் எதிர்பார்த்தது போல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஜேம்ஸ் கேமரூனின் முயற்சிக்கு பாதகம் ஏற்படா வண்ணம், இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஸ்டுடியோ மதிப்பீடுகளின்படி, வட அமெரிக்க திரையரங்குகளில் 134 மில்லியன் மற்றும் சர்வதேச அளவில் 300.5 மில்லியன், உலக அளவில் 434.5 மில்லியன் (சுமார் ரூ. 3,598 கோடி) சம்பாதித்துள்ளது.

வெளியான மூன்றே நாட்களில் இந்தியாவில் 160 கோடி ரூபாய் வசூலித்த இப்படம் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது. Avatar The Way of Water இந்தியாவில் முதல் வார இறுதியில் 160 கோடி ரூபாய் மொத்த வசூலை ஈட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் காரணமாக, வாரயிறுதியின் மூன்றாவது நாள் குறைந்த வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் படம் வசூலை தக்க வைத்துக் கொண்டது.


“டிசம்பர் தான் தீபாவளி. நீங்கள் கேட்டது சரிதான். ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆஃப் வாட்டர் பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் உலகளவில் 3,500 கோடி வசூலித்துள்ளது! இந்தியாவில் இப்படம் 3 நாட்களில் ரூ 160 கோடி வசூலித்துள்ளது” என்று அவதார் படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்