சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி விடுகின்றனர்.
அவர்கள் வளர்ந்து பெரியவர்களானாலும் கூட இரவு ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு தான் தூங்க செல்வார்கள். ஒருநாள் இரவு பால் குடிக்கவில்லை என்றாலும் கூட எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். இந்த பட்டியலில் நீங்களும் ஒருவரா.? உங்களின் தினசரி இந்த இரவு பழக்கம் உங்கள் உடல் நலம் குறைய மற்றும் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா...?
உண்மையில் இரவில் தூங்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுவதாக பல ஆண்டுகளாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நிபுணர்கள் பலர் இந்த தினசரி இரவு பழக்கம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் எடை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம் என கூறுகிறார்கள். இரவில் கட்டாயம் பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கத்தை நீங்கள் ஏன் மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே...
மலச்சிக்கல்: தினசரி இரவு நேரத்தில் கோல்ட் மில்க் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்திற்குள் பலர் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சாப்பிட்ட இரவு உணவே சரியாக செரிமானம் ஆகியிருக்காத நிலையில், தூங்குவதற்கு முன் பால் குடிப்பது செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
எடை அதிகரிப்பு: இரவில் பால் குடிப்பதன் காரணமாக புரோட்டின் மற்றும் பால் கொழுப்புகளை வளர்சிதைமாற்றம் செய்து ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் ஆட்டோமேட்டிக்காக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. தோராயமாக 1 கிளாஸ் பாலில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. ஆனால் இரவில் கலோரிகள் எளிதில் எரிக்கப்படுவதில்லை, இதனால் உடல் எடை கூடும் வாய்ப்புகள் அதிகம்.
செரிமான பாதிப்பு: இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் சில நேரங்களில் நபருக்கு நபர் மாறுபடலாம். குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத ஒருவர் இரவில் பால் குடித்தால், அவரது செரிமானத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இரவு நேரத்தில் நமது உடல் ஓய்வில் இருக்கும் போது பாலில் உள்ள புரோட்டினை வளர்சிதைமாற்றம் செய்வது உடலுக்கு கடினமாக இருக்கும். இதனால் அசௌகரியம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
வளர்சிதைமாற்றம் மெதுவாகும்: இரவில் பால் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதோடு கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இது உட்லைன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மெதுவாக்குவதோடு கொழுப்பு படிவு (fat deposition) மற்றும் எடை அதிகரிக்க காரணமாகிறது.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!