POLLING FLAMES

 

அதிமுக பொதுக்குழு வழக்கு... ஓபிஎஸ், இபிஎஸ் எதிர்காலம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் மாற்றங்கள் இவைத...

3 years ago 23 பிப்ரவரி 2023 05:18 AM | views : 246
கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடருவார். கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகும். தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நிலைமை மிகப்பெரிய கேள்விகுறியாகும். அதேநேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, எடப்பாடி பழனிசாமி தரப்பை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளிக்கலாம்.



அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகும். எம்ஜிஆர் எழுதிவைத்த உயில்படி கட்சித் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை முதல் 7 மாதங்களாக நிலவி வரும் குழப்பத்திற்கும் விடிவு கிடைக்கும்.



அதேநேரத்தில் இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முடிவுகளில் எதிரொலிக்குமா என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவைகள் தவிர, தாம்தான் அதிமுவின் பொதுச் செயலாளர் என கூறி வரும் சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன் நிலை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI AJITH PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக KEERTHY SURESH OPS தமிழ்நாடு NELLAI சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா அஜித் விடுமுறை கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION CSK தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் வன்னியர்