INDIAN 7

Tamil News & polling

எனக்கென்று ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம்

27 பிப்ரவரி 2023 03:43 AM | views : 456
Nature

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேற்று பேசும்போது தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று உருக்கமாகக்கூறினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:


-1977-ல் நாங்கள் இருந்த (அரசு) வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அது ஒரு வினோதமான சூழ்நிலை. நான் அம்மாவிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். நாம் இந்த வீட்டை விட்டுப்போகிறோம் என்று அம்மா சொன்னார். அதுவரையில் அந்த வீடு எங்கள் வீடுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எனவே எதற்காக நாம் வீட்டைக் காலி செய்து வெளியேறுகிறோம் என அம்மாவிடம் கேட்டேன். அப்போதுதான் அம்மா முதல்முறையாக இது நம் வீடு அல்ல, அரசு வீடு, நாம் இப்போது இங்கிருந்து போக வேண்டும் என்றார். அடுத்து நாம் எங்கே போவோம் என அம்மாவிடம் கேட்டேன்.

அம்மாவோ தெரியாது என்றார்.52 வருடமாக இன்னும் எனக்கென்று ஒரு வீடு இல்லை. எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் இருக்கிறது. அதுவும் இப்போது எங்களுடையது அல்ல. நான் இப்போது துக்ளக் லேனில் 12-ம் எண் வீட்டில் வசித்தாலும், அதுவும் எனது வீடு அல்ல.இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்