இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியுள்ளது.சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 46 ஜோடி ரெயில்கள் உள்பட 200 எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்ட்ரல் ரெயில் நிலையம் கையாளுகிறது. தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் ரெயில்களின் எண்., சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்கள், புறப்பட்ட ஊர், ரெயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த டப்பிங் கலைஞரும், கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசன் தமிழ் அறிவிப்புகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை `அமைதியான ரெயில் நிலையம்' என்று அறிவித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், "சென்ட்ரல் ரெயில் நிலையம் அமைதியான ரெயில் நிலையமாக மாறுவதால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது. அதற்கு பதிலாக, ரெயில்கள் புறப்பாடு, வருகை, ரெயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும்.எனவே அனைத்து டிஜிட்டல் தகவல் பலகைகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.அதன்படி சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியது. விமான நிலையங்கள் போல, நிமிடத்துக்கு நிமிடம் ரெயில்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பானது.
அதைப்பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொண்டு பயணம் செய்தனர். பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரெயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய டிஜிட்டல் திசைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக நுழைவு ரெயிலில் பிரெய்லி நெத்துக்களுடன் கூடிய வரைபடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை அவர்களுக்கு வழிகாட்டுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி வீடியோ மூலம் அறிய கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை சென்ட்ரலில் சோதனை ரீதியாக அறிவிப்புகளை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பது நிறுத்தப்பட்டு டிஜிட்டல் பலகையில் மட்டும் தகவல்களை பெறும் நடைமுறையில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ரெயில்கள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள தகவல் மையங்கள் செயல்படும்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப தகவல் மையங்கள் அதிகரிக்கப்படும். பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப அமைதி ரெயில் நிலையம் என்ற நிலை நிரந்தரமாக்கப்படும் என்றனர்.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஒலிபெருக்கி அறிவிப்புகள் இல்லாதது எந்தவித ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. டிஜிட்டல் பலகையில் அறிவிப்பு வெளியாவதால் ரெயில்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வசதியாக உள்ளது என்றனர்.
ஆனால் சில பயணிகள் கூறுகையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லாதது கடைசி நேரத்தில் வரும் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ரெயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிட முடியாது என்றனர்.
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
தளபதி விஜய் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க போவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ
சென்னை,கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 37 வயது பெண் பயணி ஒருவர் இன்று இறந்து கிடந்ததாகவும், மேலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் விமான பணியாளர்கள் அந்த பெண் தூங்கியதாக நினைத்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண் பதிலளிக்காததை கண்டு சந்தேகமடைந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்கள் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து
காரைக்கால்: தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!
தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!