சென்னை மாதவரத்தில் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொலை செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் செங்குன்றம், எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சனா (29) என்ற திருநங்கை. இவர் கடந்த 22-ந் தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் பின்புறம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் பால் பண்ணை காவல்துறையினர் கொலையான திருநங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் திருநங்கை சனாவை கொலை செய்தது ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தம் அடுத்த மகாத்மா காந்தி நகரை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன்(48) என்பது தெரிய வந்ததை அடுத்து காவல்துறையினர் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் லாரி டிரைவர் அளித்த வாக்குமூலத்தில் ராமநாதபுரத்தில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு பசி எடுத்ததால் மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச்சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை சனா, என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்.
அதற்கு ரூ.500 தரும்படி கேட்டார். பின்னர் நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது திருநங்கை சனா உல்லாசமாக இருந்ததற்கு ரூ.5000 தரும்படி கேட்டு தகராறு செய்ததால் நான் அவரை தாக்கினேன். இதனையடுத்து உன்னை கேவலப்படுத்துகிறேன் என கூறி செல்போனில் மற்ற திருநங்கைகளை அழைக்க முயன்றார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சனாவை கீழே தள்ளி அடித்து உதைத்தேன். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என காவல்துறை வாக்குமூலத்தில் லாரி டிரைவர் கணேசன் தெரித்தார்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் கணேசனை புழல் சிறையில் அடைத்தனர்.
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!