"அண்ணா" மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில் தெய்வ நிந்தனை செய்ததும், அதற்க்கு தேவரின் கண்டிப்பையும் பற்றி அண்ணாமலை அவர்கள் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேசினார். இதற்கு சில வாரங்கள் முன் தற்செயலாக இந்த நிகழ்வை பற்றி "பல ஆண்டுகளுக்கு முன் கிருபானந்த வாரியார் சுவாமிகள்" கொடுத்த பேட்டி
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வார்த்தைகள்!!
" 56-ல் மதுரையிலே நிகழ்ந்த முத்தமிழ் மாநாட்டிலே ஒரு அரசியல்வாதி ஞானசம்பந்தரை சற்று குறைவாக பேசினார். அப்பொழுது முத்துராமலிங்க தேவர் பெரிய கிளர்ச்சி செய்து, கோயிலுக்குள்ளே சமய நிந்தனைகள் செய்யக் கூடாது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கோயிலுக்கு வெளியே பொய் பேசிக் கொள்ளுங்கள் என்று தீவிரமாக வீர கர்ஜனை புரிந்தார். அந்த மாநாடு நடந்த பிறகு 2-ம் சவுக்கு மாநாட்டிலே வந்து கலந்து கொண்டார். அப்போது நான் மலேசியாவில் இருந்தேன். பத்திரிகையிலே வந்தது. தேவரும் இதைச் சொன்னார். மதுரையில் கதை நடக்கிறபொழுது மீண்டும் ஒரு முறை இதே மாதிரி சொல்லி சமய சிந்தனைகள் ஆலயங்களுக்குள் நிகழக்கூடாது அதை நாங்கள் பொறுத்துக் கொண்டியிருக்க மாட்டோம் என்று தனக்கே உரிய அழுத்தந்திருத்தமான கருத்துக்ளோடு கண்டனம் தெரிவித்தார்!
மேலும் இதே போன்ற வரலாறை கூறினார்!!
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் தேவருக்கும் நெருங்கிய உறவு உண்டு. பாஸ்கர சேதுபதி காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை பற்றி தேவர் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ராமநாதபுரத்திலே ஒரு நாடகம் சமய நிந்தனையோடு நடந்தது. முத்துராமலிங்க தேவருடைய பாட்டனார் இதை கண்டு பொறுக்காமல் அப்போதிருந்த சேதுபதி அவர்களுக்கு ரொம்ப கடினமான ஒரு கடிதம் எழுதினார். ராமநாதபுரம் சேதுபதி அவர்களுக்கு வணக்கம்! தங்கள் ஆட்சியிலே, தங்கள் ஊரிலே தெய்வ நிந்தனையோடு கூடிய நாடகம் நடந்தது என்று கேள்விபடுகிறேன். இப்படி நடக்கலாமா? நடக்க நீங்கள் உடன்படலாமா? அப்படி நடக்க நீங்கள் விடலாமா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் படை திரண்டு வந்து அரண்மனையை இடித்தால் அரண்மனையில் செங்கல் தான் மீதியாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன் என்று கடிதம் போட்டார். சேதுபதி நெருங்கிய உறவு ஆகையினால் சிரித்து கொண்டே இங்கே சுமுகமாக வாருங்கள் என்று எழுதியிருந்தார்கள். முத்துராமலிங்க பாட்டனார் அங்கே போனார், சேதுபதி அன்போடு வரவேற்றார். ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையாக கடிதம் எழுதியிருந்தீர்கள்? அதற்கு தேவருடைய பாட்டனார் சொன்னாராம், "மகாராஜா, நான் தவறாக எழுதி விட்டேன். எல்லோரும் ஒன்றாக வந்து அரண்மனையை இடித்தால் ஆளுக்கொரு செங்கல் வரும் என்று எழுதினேன். சிந்தித்து பார்க்காமல் எழுதி விட்டேன். அவர்கள் எல்லோரும் திரண்டு வந்து இடித்தால் ஆளுக்கொரு செங்கல்பொடி பல் துலக்க ஆகும் என்பதை நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அதைவிட கடுமையாக சொன்னார். சேதுபதி சிரித்துக்கொண்டே அவரை கட்டித் தழுவி இனிமேல் இப்படி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். இதை முத்துராமலிங்க தேவரே சொன்னார்...
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!