இன்னும் 2 மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்!

By Admin | Published in செய்திகள் at ஜனவரி 05, 2024 வெள்ளி || views : 657

இன்னும் 2 மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்!

இன்னும் 2 மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்!

சென்னை:தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை கட்சியின் மூத்த அமைச்சர்கள் அணுகி வருகின்றனர்.அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும் அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகள் அவரை 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர். அமைச்சராக பொறுப்பெற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.

இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.இதற்கு முன்னதாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வழங்கப்பட்டு விடும் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விசயம் கிசுகிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

MINISTER UDHAYANIDHI STALIN DMK MK STALIN அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக முக ஸ்டாலின் திமுக இளைஞரணி மாநாடு
Whatsaap Channel
விடுகதை :

சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?

விடுகதை :

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?

விடுகதை :

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு? அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next