POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

2 years ago 24 மார்ச் 2024 03:32 PM | views : 189
திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.

தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. துண்ட காணோம்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK உதயநிதி ஸ்டாலின் PMK பாமக அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் கைது காங்கிரஸ் சட்டசபை தேர்தல் திருமாவளவன் தமிழகம் கோவை COIMBATORE UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI CONGRESS இந்திய அணி அமமுக தேவர் வடகிழக்கு பருவமழை INDIAN CRICKET TEAM KEERTHY SURESH வன்னியர் OPS THIRUMAVALAVAN சீமான் கொலை பிரதமர் மோடி AJITH நெல்லை தென்காசி தீபாவளி NELLAI TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் SURIYA PARLIAMENT ELECTION மதுரை தமிழ்நாடு தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் தூத்துக்குடி PRIME MINISTER MODI பாலியல் தொல்லை BIGG BOSS TAMIL CSK அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI அஜித் விடுமுறை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON மோடி திருப்பரங்குன்றம் சூர்யா