பாராளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்றார்.
நேற்று இரவு சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.வழக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலையில் அங்குள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 7.35 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டார்.
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்காவையொட்டிய சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றார். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். மேலும் காய்கறி வாங்க வந்து பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு அவர்கள் கனிமொழி எம்.பி. எனவும், தொகுதி வளர்ச்சிக்கு நன்றாக செயல்படுவதாகவும் கூறினர்.அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர். அப்போது மறக்காமல் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் நடைபயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று பின்னர் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நின்றிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் முதலமைச்சருக்கு கை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
“மாந்திரீக பூஜை என்றால் என்ன,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்ட கேள்விக்கு, “மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை, இந்த ஆட்சியில் எங்கும் இல்லை,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு, திருமண மண்டபம் கட்ட வேண்டும்.
எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் நேற்று மீண்டும் புறக்கணித்தார். அதன் எதிரொலியாக செங்கோட்டையனின் எம்எல்ஏ மற்றும் கட்சி பதவிகளை பறிக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது..தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தி.மு.க.
சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:- மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா.
தமிழ்நாடு அரசு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை கொடுக்கும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!