POLLING FLAMES

 

தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

2 years ago 31 மார்ச் 2024 01:30 AM | views : 254
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-பானை சின்னம் புகழ் பெற்ற சின்னமாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்துள்ளேன். இன்று(நேற்று) என் வாழ்வில் ஒரு பொன்னாள்.
இன்று(நேற்று) தான் முதன்முதலாக திருமாவளவனுக்காக நான் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். திருமாவளவனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பூசி குறித்து பயத்தை போக்கி கோவிட் வார்ட்டுக்கு சென்ற ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

ஆட்சி அமைத்தவுடன் கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திராவிட மாடலின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றனர்.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல கியாஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு வராதவர் கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடாமல் பயந்து போய்விட்டார். தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது. மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றார். புதிய இந்தியா பிறக்கும் என்றார். யாராவது புதிய இந்தியாவை பார்த்தீர்களா?

தமிழ்நாட்டின் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு ஒரு பைசாக்கூட கொடுக்கவில்லை. மேலும் மோடி, கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். ஆனால் 15 பைசா கூட கொடுக்கவில்லை. 'நீட்' தேர்வால் 22 மாணவர்கள் தமிழ்நாட்டில் பலியாகினர். இதற்கு பா.ஜனதா பதில் சொல்ல வேண்டும். கூட இருந்த அ.தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். அதற்கான நேரம் தான் ஏப்ரல் 19-ந் தேதி. இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளை வென்று கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுப்போம்.2021-ல் அடிமைகளை விரட்டினோம். இந்த ஆண்டில் அடிமைகளின் உரிமையாளர்களை தேசிய அளவில் விரட்டுவோம். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை