நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 2019 தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த முறை ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட தயக்கம் காட்டலாம் என தெரிகிறது.இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏன் அமேதியை விட்டு ஓடினார்? இதற்கு முன்பு அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்தான். முன்னதாக, அந்த தொகுதியில் அவரது தந்தை மற்றும் மறைந்த மாமா சஞ்சய் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். அதனால் இந்த முறையும் போட்டியிடும் தைரியம் ராகுல் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? ஏனென்றால் அங்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இந்த முறை அவருக்கு அங்கும் கடும் போட்டி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பாட்னா சாகிப் மக்களவை தொகுதியின் எம்.பி.யான ரவி சங்கர் பிரசாத், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!