ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

By Admin | Published: ஏப்ரல் 11, 2024 வியாழன் || views : 222

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு:

ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மானாமதுரை, கடலாடி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.இத்தொகுதி முதல் மூன்று முறையும் காங்கிரஸ் வசமிருந்தது. நாகப்ப செட்டியார் என்பவரே இத்தொகுதியின் முதல் எம்.பி ஆவார்.ஃபார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த பி.கே.மூக்கையா தேவர் ராமநாதபுரம் தொகுதியின் எம்.பியாக இருந்தவர். சேதுபதி சமஸ்தான வாரிசு ராஜேஸ்வர சேதுபதி, நடிகர் ஜே.கே ரித்திஷ், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி போன்றோர் இத்தொகுதியின் பரிட்சயமான எம்.பிக்கள் ஆவர்.ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், ஃபார்வர்டு பிளாக், த.மா.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.

2019 தேர்தல் முடிவுகள்:

2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி 44.29% வாக்குகளுடன் மொத்தம் 469,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்றார். தனியாக களமிறங்கிய அமமுகவின் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 14,925 வாக்குகளும் கிடைத்தன.

ராமநாதபுரம் தொகுதியை பற்றி..

தமிழகத்தின் பின் தங்கிய வறட்சி பகுதியாக கருதப்படுகிறது ராமநாதபுரம் மாவட்டம். குடிநீர் பிரச்னை தலையாய பிரச்னையாகும். அதே நேரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், உலகின் முதல் கோவிலாக கருதப்படும் உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம் நவகிரக கோவில், திருப்புல்லானி, ஏர்வாடி தர்கா என ஆன்மிக ரீதியாகவும் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க இடமாக திகழ்கிறது ராமநாதபுரம். இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அகதிகள் முகாம் என சென்சிடிவ் ஆன விவகாரங்கள் உள்ளது இத்தொகுதி. முன்பெல்லாம் தமிழக மீன்வர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்தது. தற்போது அது முற்றிலும் குறைந்துள்ளது.புயலால் அழிந்த தனுஷ்கோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடல் மீது போடப்பட்ட பிரம்மாண்ட பாம்பன் பாலங்கள் என இத்தொகுதியின் சிறப்புகள் ஏராளம். என்னன்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியது இத்தொகுதி.

முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்கள். குறிப்பாக மீன் பிடி தொழில் சார்ந்த ஏற்றுமதி தொழிலும் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் தொகுதியில் நடந்துள்ளன.மொத்த வாக்காளர்கள் எவ்வளவு?கடந்த ஜனவரி 2024-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.68 லட்சம். இதில் ஆண்கள் 5.80 லட்சம் பேர், பெண்கள் 5.88 லட்சம் பேர்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்

2024 தேர்தலில் ராமநாதபுரம் பிரதமர் மோடியே களமிறங்கும் தொகுதியாக பேசப்பட்டது. தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கியிருப்பதால் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

அதிமுகவில் தலைமை பொறுப்பு வகித்து பின்னர் அக்கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் பெரும்பான்மை சமூகமான முக்குலத்தோர் வகுப்பு வாக்குகள் அவருக்கு பக்கபலம். கூடுதலாக பாஜக ஆதரவும் அவருக்கு உள்ளது. ஓபிஎஸ்-ஐ ஒழித்துக்கட்ட வேண்டும் என முனைப்புடன் அவருக்கு எதிராக மேலும் 5 பன்னீர்செல்வத்தை எதிர் தரப்பு களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய அளவில் திமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே தான் பிரதான போட்டி என கூறப்படுகிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்.பி ஆன ஐ.யூ.எம்.எல் கட்சியின் நவாஸ் கனிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைத்துள்ளது. அவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளும், திமுக கூட்டணியின் அசுர பலத்துடன் அவர் தேர்தலை எதிர்கொள்கிறார்.

அதிமுக சார்பாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். எனினும் அவரின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம் ஆகும். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அண்ணன் திமுக பிரமுகர் அக்ரி கணேசன். மற்றொரு சகோதரர் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா. இவரின் தந்தை எம்.ஜி.ஆரை எதிர்த்து திமுக சார்பாக போட்டியிட்டவர். முக்குலத்து சமூக வாக்குகள் இவரின் பலம்.

நாம் தமிழர் சார்பாக சந்திர கலா போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்

0
0

ராமநாதபுரம்
Whatsaap Channel

உங்களுக்கு பிடிக்காத தமிழக அரசியல்வாதி யார்?

உங்களுக்கு பிடிக்காத தமிழக அரசியல்வாதி யார்?

மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி


மெரினா விமான சாகச நிகழ்ச்சி 5 பேர் மரணதிற்கு காரணம்?

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 5 பேர் மரணதிற்கு காரணம்?

அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை


விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


விடுகதை :

கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


பீதியை கிளப்பிய திருச்சி விமானம்.. பத்திரமாக தரையிறங்கியது

பீதியை கிளப்பிய திருச்சி விமானம்.. பத்திரமாக தரையிறங்கியது


141 பயணிகளின் நிலை என்ன? உலகில் அதிகம் பேரால் டிராக் செய்யப்படும் திருச்சி விமானம்!

141 பயணிகளின் நிலை என்ன? உலகில் அதிகம் பேரால் டிராக் செய்யப்படும் திருச்சி விமானம்!


Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly

Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly


வேட்டையன் முதல் நாள் வசூல்! vettaiyan movie day 1 box office collection

 வேட்டையன் முதல் நாள் வசூல்!  vettaiyan movie day 1 box office collection


ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து சொன்ன த.வெ.க தலைவர் விஜய்!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து சொன்ன த.வெ.க தலைவர் விஜய்!


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்

சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்


மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி

மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next