INDIAN 7

Tamil News & polling

ஓடும் காரில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

12 ஜனவரி 2026 09:49 AM | views : 23
Nature

ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் மாவட்டம் நபசர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 6ம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது மாணவியை பின் தொடர்ந்து கார் வந்துள்ளது. அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய 2 இளைஞர்கள் மாணவியை காரில் கடத்திச்சென்றனர்.

பின்னர், ஓடும் காரில் வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கார் நபசர் கிராமத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் சென்றபோது மாணவி கூச்சலிட்டுள்ளார். அப்போது, கிராம மக்கள் காரை இடைமறித்து மாணவியை மீட்டனர். அதேவேளை, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவரும் தப்பிச்சென்றனர்.

மேலும், மாணவியின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதேவேளை, பிளஸ் 2 மாணவியை காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நேற்று போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற 2 இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓடும் காரில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு

Image உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் பங்கஜ் பதக். இவர் கோட்வாலி பகுதியில் வசித்து வரும் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள், புகைப்படங்கள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்