நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கங்கனா ரனாவத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.28.7 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 62.9 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கங்கனா ரனாவத்திடம் கையிருப்பு தொகையாக ரூ.2 லட்சம் உள்ளதாகவும், வங்கி கணக்கில் ரூ.1.35 கோடி உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மும்பை, பஞ்சாப் மற்றும் மணாலியில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.3.91 கோடி மதிப்பிலான 3 சொகுசு கார்கள் தன்னிடம் இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, கங்கனா ரனாவத்திடம் ரூ.5 கோடி மதிப்பிலான 6.7 கிலோ தங்கம், ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும், அவரது பெயரில் 50 இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ரூ.7.3 கோடி மதிப்பிலான கடன்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கங்கனா ரனாவத் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் உள்பட மொத்தம் 8 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!
தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!