இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி(நாளை) நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3-வது முறை பிரதமராக பதவியேற்கப்போகும் மோடிக்கு, உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளை செய்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் 'ஸ்டார் லிங்' திட்டம் குறித்த அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருகை தருவார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!