விருதுநகர் - தேடல் முடிவுகள்

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 2 weeks ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

2024-04-11 02:57:32 - 4 weeks ago

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக


நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு!

2024-04-06 07:56:03 - 1 month ago

நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு! வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி


நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

2024-04-03 03:56:20 - 1 month ago

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார். “3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய


கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு

2024-03-31 14:59:01 - 1 month ago

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா பேசியதாவது:-இந்தியா


துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

2024-03-24 15:32:32 - 1 month ago

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி


சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

2024-03-23 04:54:07 - 1 month ago

சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி? வேலூர் மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை - பால்


தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி

2024-03-22 10:18:20 - 1 month ago

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி,


அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

2024-03-20 00:47:24 - 1 month ago

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.? அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய


தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்!

2024-03-11 11:53:22 - 1 month ago

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்! பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி எம்.பி.யாக உள்ள