POLLING FLAMES

 

சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

2 years ago 23 மார்ச் 2024 04:54 AM | views : 261
வேலூர் மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.



தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை - பால் கனகராஜ், திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், நாமக்கல் - .பி.ராமலிங்கம், திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம், சிதம்பரம்(தனி) - கார்த்தியாயினி, விருதுநகர் - ராதிகா சரத்குமார், தென்காசி - ஜான் பாண்டியன், புதுச்சேரி - நமச்சிவாயம் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக பாஜக வேட்பாளராக வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


வேலூர் மாநகராட்சி தேர்தலில் 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தியாயினி சுமார் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை தோற்கடித்து மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மேயராக இருந்தபோது தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பையும் விமர்சித்தும், எதிர்த்தும் மாநகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கார்த்தியாயினி அரசியல் அரங்கை அதிரவிட்டது மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிபதியை விமர்சித்தன் காரணமாக அவர் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கார்த்தியாயினி பகிரங்க மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது.

அதன்பின் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓரம் கட்டப்பட்டதை அடுத்து கார்த்தியாயினி பாஜகவில் இணைந்தார். அவருக்கு தற்போது சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசனும் போட்டியிடுகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK டிடிவி தினகரன் கனமழை ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் PARLIAMENT ELECTION AJITH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS அமமுக KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் கைது தேவர் NELLAI கொரோனா வடகிழக்கு பருவமழை நெல்லை BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் RAJINIKANTH THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SURIYA மதுரை கள்ளக்காதல் தென்காசி CSK சூர்யா விடுமுறை தூத்துக்குடி வன்னியர் தீபாவளி அஜித் திருப்பரங்குன்றம்