தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share