தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ராஜினாமா செய்துவிட்டு கமலா ஹாரிஸை அதிபராக்கவும் : பைடனுக்கு முன்னாள் உதவியாளர் பரிந்துரை

அமெரிக்க அதிபர் தேர்தரில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார்.

இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல் பெண் அதிபர் என்ற சாதனையாகிவிடும் என கமலா ஹாரிஸின் முன்னாள் தகவல்தொடர்பு இயக்குனர் ஜமால் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜோ பைடன் அற்புதமான அதிபர். அவர் தெரிவித்த ஏராளமான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். அங்கு ஒரு வாக்குறுதி மீதமுள்ளது. அதை அவர் ஒரு இடைக்கால உருவமாக நிறைவேறற முடியும். அடுத்த 30 நாட்களுக்கான அதிபர் என்பதை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸை நியமிக்க வேண்டும்.

இது ஜோ பைடனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதை அவர் செய்து, தனது கடைசி வாக்குறுதியை நிறைவேற்றினால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47-வது அதிபராகும் வாய்ப்புள்ளது" என்றார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel