தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் ஸ்பிக் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக சிறு பொட்டலங்களாக மடித்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


3 பேர் கைதுவிசாரணையில், அவர்கள் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முருகன் (29), பொன் பாண்டி நகரைச் சேர்ந்த முத்துமணி (24) மற்றும் மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


இதையடுத்து மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கஞ்சா விநியோகம் செய்த மொத்த வியாபாரியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel