‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய சொல்லி போலீசார் மிரட்டுகின்றனர்’ - அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
சமீபத்தில் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். கைதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கண்காளிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ராதாகிருஷ்ணனிடம் கிட்டத்தட்ட 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர்,
“மேலிட உத்தரவை (தவெக) வைத்து காவல்துறை அதிகாரிகள் என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். நான் தவறு செய்யாதவன். ஒருகாலமும் என்னை பொய்வழக்கு போட்டு அடக்கமுடியாது.
என்னை ராஜினாமா செய்யசொல்லி வற்புறுத்தினார்கள். மேலும் தவெகவில் சேரசொல்லி வற்புறுத்தினார்கள். காவல்துறை அராஜகம் செய்கிறது.” என தெரிவித்தார்.
அப்போது அவரது ஆதரவாளர்களும் போலீசார் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel