LIVE | பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம், இ-சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார்.

பெரம்பூர் தொகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். முதற்கட்டமாக 50,000 பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து புதிதாக திறக்கப்படவுள்ள நியாய விலை கடை வரை முதலமைச்சர் விஜய் நடந்து செல்கிறார்.

பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் பின்னர், நடந்தே சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். பூக்களை தூவி வரவேற்ற பொது மக்கள்.

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர் விஜய் அங்குள்ள இ-சேவை மையத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சான்றிதழை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இணையதளம் மற்றும் செயலி எவ்வாறு இயங்குகிறது, புகார் அளித்தால் உடனடி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர் விஜய் அங்குள்ள இ-சேவை மையத்தை ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியரின் தோளில் தட்டி கொடுத்தார்.

பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இ சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தவெக கொள்கை தலைவர்களின் படங்களுக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தான் வென்ற பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பெரம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, தன்னுடைய வைரல் செய்கையை செய்தபடி கூட்டத்தில் சென்றார்.

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதிக்கு செல்லும் வழியெங்கும் நின்றிருந்த மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

முதலமைச்சர் விஜய் வருகைக்காக பெரம்பூரில் மக்கள் திரண்டுள்ளனர். அதனால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு.

தான் போட்டியிட்டு வென்ற பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டார்.

தனது சட்டமன்ற அலுவலகத்தை திறந்த வைக்க பெரம்பூர் வரும் முதலமைச்சர் விஜய்க்கு வழங்குவதற்காக சிறுவன் ஒருவன் பரிசுப் பொருளுடன் காத்திருப்பு.

சென்னை பெரம்பூரில் தனது சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் முதலமைச்சர் விஜயை காண, மக்கள் திரண்டிருக்கின்றனர். குடும்பத்துடன் நீண்டு நேரமாக காத்திருக்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு வியாசர்பாடி மெட்ரோவில் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை பார்வையிடுகிறார்.

அதன் பிறகு, எம்.கே.பி.நகரில் ரேஷன் கடையை பார்வையிட உள்ளார். அங்கு ஆய்வையும் நடத்துகிறார். மேலும் 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டையை வழங்குவதோடு, அவர்களுக்கான பொருட்களையும் வழங்க இருக்கிறார்.

இ-சேவை மையத்தை தொடங்கி வைத்து அதனை பார்வையிடுகிறார். இதனையடுத்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களிடம் மனுக்களை விஜய் நேரில் வாங்குகிறார். தொடர்ந்து இ-சேவை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

இதன் மூலம் பெரம்பூர் தொகுதி முதலமைச்சரின் தொகுதியாக வி.ஐ.பி. என்ற அந்தஸ்தை பெற்றது. பொதுவாக அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்காக அதே தொகுதியில் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

த.வெ.க. தலைவர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலுமே வெற்றி வாகை சூடியதோடு, முதலமைச்சர் அரியணையையும் அலங்கரித்தார்.

2 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்த நேரத்தில், பெரம்பூர் தொகுதியை கையில் எடுத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். மேலும் மக்களை சந்தித்து இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel