ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயு கசிவு- 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் சேகோ (Sago) ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.
இதில், பாதிக்கப்பட்ட 6 பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,வாயு கசிவை தடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மணி நேரமாக வாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel