சீனாவில் இரவு விடுதிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளில் திருமண பதிவு செய்து கொள்ளலாம்
சீனாவில் பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் தங்களது திருமண செயல்முறையை விரைவாகவும், எளிதாகவும் பதிவு செய்யும் வகையில் மகப்பேறு மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற வழக்கத்திற்கு மாறான இடங்களில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற கிஷி திருவிழாவில் (காதலர் தின விழா) கலந்துகொண்ட புதுமண தம்பதிகள், ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள லின்சி மாவட்ட தாய் மற்றும் குழந்தை நல மருத்துவமனையில், சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இந்த ஏற்பாடு புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவும், திருமணத்திற்கு முந்தைய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்ளவும், ‘ஒரே இடத்தில் அனைத்து சேவைகளை’ வழங்கும் மையமாகவும் அமைய உள்ளது.
மேலும், புதுமண தம்பதிகள் கருத்தரிப்பிற்கு முந்தைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சீனாவின் தியான்ஜீனில் உள்ள சீன அஞ்சல் சேமிப்பு வங்கியின் ஒரு கிளை, திருமண பதிவு சேவைகளை வழங்கும் நாட்டின் முதல் வங்கியாக மாறியது.
இதையடுத்து குவாங்சோ பையுன் சர்வதேச விமான நிலையம் திருமண சான்றிதழ்களை வழங்க தொடங்கியது. அதே நேரத்தில், ஷாங்காய்-இல் உள்ள ஒரு இரவு விடுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளை நடத்தியது.
மேலும் மெட்ரோ நிலையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களிலும் திருமணம் செய்துகொள்ளும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக, இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், இளைஞர்களை குடும்பமாக ஊக்குவிக்க சீன அதிகாரிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர்.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஆவண நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருமணங்கள் தற்காலிகமாக அதிகரித்த போதிலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் திருமண பதிவுகள் மேலும் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel